ஸ்ருதிக்கு சிபாரிசு செய்த நாகார்ஜுனா
By kesa at 4:18 PM
actress photos, athisayam, Cinema, Entertainment, kisukisu, tamilmovie
ஸ்ருதிக்கு பிரபல நடிகர் சிபாரிசு செய்தார்.கோலிவுட், டோலிவுட், பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாசன். மூன்று மொழிகளிலும் போட்டி ஹீரோயின்களை சமாளிக்க வேண்டி உள்ளது. ஹீரோக்களுடன் சுமுகமான நட்பு இருந்தால் மட்டுமே ஹீரோயின்கள் போட்டி களத்தில் தம் கட்ட முடியும்.
ஸ்ருதியை பொறுத்தவரை தனது ஹீரோக்களுடன் சுமுக உறவை கடைபிடித்து வருகிறார்.தமிழ், தெலுங்கில் உருவாகும் புதிய படமொன்றில் நாகார்ஜுனா, கார்த்தி இணைந்து நடிக்கின்றனர். வம்சி பைடிபாலே இயக்குகிறார்.
இப்படத்தில் ஸ்ருதி ஹாசனை ஹீரோயினாக புக் செய்யுங்கள் என்று இயக்குனரிடம் நாகார்ஜுனா சிபாரிசு செய்தாராம். உடனே ஓகே சொன்ன இயக்குனர் இதுபற்றி தயாரிப்பாளரிடம் கலந்துபேசி ஸ்ருதியை ஹீரோயினாக்கி இருக்கிறார். 2 ஹீரோக்கள் கதையான இதில் கார்த்தி, நாகார்ஜுனா நடித்தாலும் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாகவே ஸ்ருதி நடிக்கிறாராம்.
